/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
ADDED : ஜன 12, 2024 11:17 PM

உடுமலை;குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உடுமலை குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மார்கழி மாத உற்சவ பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது. நாள்தோறும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன், திருப்பாவை பாசுரம் வழிபாடு நடந்து வருகிறது.
நேற்று, கூடாரை வெல்லும் கோவிந்தன் பாசுர நிகழ்வாக, ஆண்டாள் நாச்சியார் சமேத ரங்கமன்னார் சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பூமிலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது.
தொடர்ந்து கலைக்குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. மாலையில் ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, பொதுமக்கள் திருமணத்துக்கான சீர்வரிசைகளை எடுத்து வந்தனர். இரவில் சுவாமிகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலையில் திருக்கல்யாண உற்சவ சிறப்பு வழிபாடு கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பாராயண நிகழ்ச்சி நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் நடந்தது.
திருமண கோலத்தில் சுவாமிகளின் அருளைப்பெற திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.