/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் படகு இல்லம் கோலாகலம்
/
ஆண்டிபாளையம் படகு இல்லம் கோலாகலம்
ADDED : ஜன 16, 2025 11:23 PM

திருப்பூர்; திருப்பூர் - மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில், சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள், குளத்தில் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர்.
சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ள படகு இல்லத்தில், மாவட்ட சுற்றுலா துறை சார்பில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் வரவேற்றார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், குடும்பத்தினருடன் பங்கேற்றார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற கலெக்டர், நுழைவாயில் முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற குளக்கரை வரை, மாட்டு வண்டியில் பயணித்தார். சிலம்பம், பரதம், வள்ளி கும்மி ஆட்டம், தப்பாட்டம், துடுப்பாட்டம், பறையாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலெக்டர் மற்றும் மேயர், தப்பாட்டம் அடித்தனர்; வள்ளி கும்மி குழுவினருடன் இணைந்து, கலெக்டர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் நடனமாடி அசத்தினர். புதுப்பானையில் பொங்கலிடப்பட்டது. உரியடி போட்டி நடத்தப்பட்டது.
ஆண்டிபாளையம் படகு இல்ல மேலாளர் பாலசுப்பிரமணியம், பொங்கல் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.