/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அபாய' அங்கன்வாடி கட்டடம் ; அச்சத்தில் பெற்றோர்
/
'அபாய' அங்கன்வாடி கட்டடம் ; அச்சத்தில் பெற்றோர்
ADDED : ஜூன் 02, 2025 11:28 PM

திருப்பூர் : தென்னம்பாளையம், மாநகராட்சி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில், தென்னம்பாளையம் மற்றும் பூம்புகார் நகர் பகுதிக்கான அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இரு மையங்களிலும் ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். கடந்த சில மாதம் முன், அங்கன்வாடி மையக் கட்டடம் பழுதாக இருந்ததால், மாநகராட்சி பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நேற்று கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளும் வந்தனர். பள்ளியில் மாணவர்கள் அதிகளவில் இருந்ததால், அங்கன்வாடி குழந்தைகள் பயன்படுத்திய வகுப்பறை பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கே மீண்டும் குழந்தைகள் அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டனர். இதனால், குழந்தைகளின் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
அப்பகுதி கவுன்சிலர் கணேசன் கூறியதாவது:
தென்னம்பாளையம் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தற்போது தான், 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில்நுட்ப அனுமதி பெற்று, நிதி அனுமதிக்கு சென்றுள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி அல்லது வேறு ஏதாவது நிதியில் இதை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். பூம்புகார் பகுதிக்கு புதிதாக மையம் அமைக்கவும் முயற்சி செய்யப்படும். மையம் சீரமைக்கும் வரை, துவக்கப்பள்ளி வகுப்பறையில் இந்த குழந்தைகளை அமர வைக்க ஏற்பாடு செய்யப்படும்.