ADDED : மார் 24, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : பொங்கலுார், மணியம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காரை பெயர்ந்து விழுகிறது. குழந்தைகள் கை கழுவும் தண்ணீர் தொட்டிக்கு மேலேயும், கதவுக்கு அருகிலும் சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. கட்டடத்தை பழுது பார்க்க வேண்டும். அல்லது இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். குழந்தைகளின் உயிருடன் விளையாடலாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.