தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

 அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

 அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்


ADDED : பிப் 05, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதியம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஆக்டோ ஜியோ' சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகிறது. இரண்டாவது நாளான நேற்று, திருப்பூர் மாவட்டத்தில் 1,200 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு (ஆக்டோ ஜியோ), சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் 1,200 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளான நேற்று, கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணை தலைவர் ஆதிலட்சுமி தலைமை வகித்தார். ஆக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிசங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

21 அம்ச கோரிக்கைகள் தி.மு.க.வின், முந்தைய சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை, காலமுறை ஊதியத்தால் நிரப்ப வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

தனிநபர் விருப்பத்தை பெறாமல், காப்பீடு திட்டத்தை புதுப்பிப்பதை கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்குசம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான 15 ஆயிரத்து 700 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். அரசின் மொத்த வரி வருவாய், 70 சதவீதத்துக்கு மேல் ஈட்டிக்கொடுக்கும் வணிக வரித்துறையில், நீண்டகாலமாக நிலவிவரும் முதுநிலை பிரச்னைக்குரிய உச்சநீதிமன்ற வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பன உள்பட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.

சாலை மறியல்;300 பேர் கைது பல்லடம் - திருப்பூர் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் முன்புறம், 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர். தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடி பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால், கடந்த இரண்டு நாட்களாக, 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, 'அங்கன்வாடி ஊழியர் 286 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 147 மையங்களில், மாற்று ஏற்பாடுகள் வாயிலாக, குழந்தைகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது,' என்றார். சத்துணவு மையங்களிலும் இதேபோல் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us