ADDED : செப் 08, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.
கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அங்கு வழங்கப்படுகிறது. வரும், 11ம் தேதி கறவை மாடு வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. வரும், 18ம் தேதி வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பு குறித்தும், 25ம் தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பிலும், 26ம் தேதி பன்றி வளர்ப்பு குறித்தும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.காலை, 10:00 மணிக்கு துவங்கும் பயிற்சியில், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பங்கேற்று, சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு, 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.