ADDED : பிப் 03, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 55வது நினைவு நாள் நேற்று அனைத்து பகுதியிலும் அனுசரிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன் அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.