/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அண்ணாமலை பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
/
அண்ணாமலை பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : பிப் 03, 2024 11:44 PM
திருப்பூர்;அண்ணாமலை பல்கலை, திருப்பூர் மையத்தில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து, திருப்பூர் மைய பொறுப்பாளர் அருள் அரசு அறிக்கை:
அண்ணாமலை பல்கலை, திருப்பூர் தொலைதுார மற்றும் இணைய வழிக் கல்வி மையத்தில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பி.எப்.ஏ., - எம்.எப்.ஏ., (இசை), எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம், - எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர்), டிப்ளமோ, சி.எல்.ஐ.எஸ்., - டி.சி.ஏ., மற்றும் யோகா ஆகிய துறைகளில் சேர்க்கை நடைபெறுகிறது.
பிற கல்லுாரி மற்றும் அண்ணாமலை பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு, 50 சதவீதம் கட்டண சலுகை உள்ளது. கூடுதல் விவரம் பெற, 99442 65691 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.