தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விருக் ஷா பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் 

 விருக் ஷா பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் 

 விருக் ஷா பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் 


ADDED : மார் 19, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில் செயல்படும் விருக் ஷா இன்டர்நேஷனல் பள்ளியில், ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது.

விழாவுக்கு,திருப்பூர் மாவட்ட எஸ்.பி. யாதவ் கிரீஸ் அசோக், முதன்மை விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கி, தடகள வீரர் மில்கா சிங்கின் சாதனைகளை கூறி, ''மாணவர்கள் படிப்புடன், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்தால், வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்,'' என்றார்.

பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் ஆகியோர், விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து பேசினர். யோகா, சிலம்பம், வில் வித்தை, லெஸிம், ஹூலா ஹூப்ஸ், ஏரோபிக்ஸ், ட்ரம்ஸ், பறை, பேப்ரிக் பேட்டெர்ன் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை, மாணவ, மாணவியர் வெளிக்காட்டி,பெற்றோர் மற்றும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். பள்ளி முதல்வர் ஹேமலதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us