ADDED : பிப் 02, 2024 11:08 PM
உடுமலை;உடுமலையை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆண்டுவிழா நடந்தது.
உடுமலை அருகே, உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். முதுகலை ஆங்கில ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார். முன்னாள் ஊராட்சித்தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.
'மாணவர் நலனும், கல்வி நலனும்' என்னும் தலைப்பில் பேச்சாளர் கணபதி பேசினார். 'தமிழ் மொழியின் சிறப்பு' என்னும் தலைப்பில் இலக்கியா, ஹரிப்பிரியா ஆகியோர் இலக்கிய உரை நிகழ்த்தினர்.
மாணவ மாணவியரின், நடனம், நாடகம், ஆடல், பாடல், கவிதை முதலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

