/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆண்டுதோறும் உற்பத்தி மானியம் :விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்'
/
'ஆண்டுதோறும் உற்பத்தி மானியம் :விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்'
'ஆண்டுதோறும் உற்பத்தி மானியம் :விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்'
'ஆண்டுதோறும் உற்பத்தி மானியம் :விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்'
ADDED : டிச 01, 2025 02:10 AM
திருப்பூர்: ''விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பூரில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னை களால் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இயற்கை சீற்றம், அரசு அறிவிப்புகள், நடவடிக்கைகள் என பல வகையிலும் இன்னல்கள் ஏற்படுகின்றன.
விவசாயிகளின் அனைத்து கடன்களையம் எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி மானியமாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 13 லட்சம் ஏக்கர் இனாம் மற்றும் ஜமீன் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும்பூஜ்ஜிய மதிப்பு செய்துள்ளது; பட்டா மாறுதல் செய்து அவற்றை அபகரிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம், செங்கப்பள்ளியில், சுங்கச்சாவடி அருகில், வரும் 28ல் நடக்கிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், டில்லி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் யுத்வீர் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு, ஈசன் முருகசாமி கூறினார்.

