/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 18, 2025 11:07 PM
திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது.
முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் பணியை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை 15 நாட்களாக சுறுசுறுப்பாக மேற்கொண்டனர்.
இரு மையங்களில், 510 ஆசிரியர்கள் வாயிலாக, மேற்கொள்ளப்பட்ட பணி, நேற்றுமுன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. வரும் நாட்களில், திருத்தப்பட்ட விடைத்தாள்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த தேர்வு மையத்தில் இருந்து, கணினி வழியாக தேர்வுத்துறை இணையத்தில், பதிவேற்றம் செய்யும் பணி துவங்கும்.
பாட வாரியாக மதிப்பெண் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் நடைபெறும்; ஏப்ரல் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, ஏற்கனவே அறிவித்தபடி மே, 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
- நமது நிருபர் -

