/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு : பள்ளியில் ஓவிய போட்டி
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு : பள்ளியில் ஓவிய போட்டி
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு : பள்ளியில் ஓவிய போட்டி
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு : பள்ளியில் ஓவிய போட்டி
ADDED : அக் 30, 2025 11:04 PM

உடுமலை:  ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு வாரத்தையொட்டி, சின்னபூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
ராகல்பாவி கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு வார அனுசரிப்புக்காக இப்போட்டி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோவை மண்டல ஊழல் கண்காணிப்பு அலுவலர் பிரதீப்குமார், 'விழிப்புணர்வு கண்காணிப்பு வாரத்தின் அவசியம் மற்றும் மாணவர்களின் பொறுப்புகள் குறித்தும் கூறி, ஓவிய போட்டியை துவக்கி வைத்தார்.
ராகல்பாவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் தன்யா ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பின் அவசியம் மற்றும் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.
வங்கி காசாளர் கார்த்திகா, மாணவர்களை ஊழல், லஞ்சம் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க வைத்தார்.
'ஊழல் விழிப்புணர்வு - நமது கூட்டுப் பொறுப்பு', என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

