/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான மினி பஸ்கள் மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு
/
மாயமான மினி பஸ்கள் மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 25, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடம் பச்சாபாளையம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
பச்சாபாளையம் பகுதியில் வசிப்போர் வெளியூர் செல்ல பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். மேலும், இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும் அதிகம். இவ்வாறு செய்பவர்களுக்கு வசதியாக, இவ்வழித்தடத்தில் மினி பஸ்கள் இயங்கி வந்தன.
கடந்த சில மாதங்களாக, மினி பஸ்கள் 'மாயமாகி' விட்டன. இதனால், பொதுமக்கள் நடந்தும், வாகன ஓட்டிகளிடம் 'லிப்ட்' கேட்டும் செல்ல வேண்டி உள்ளது. எனவே, ஏற்கனவே இயங்கி வந்த மினி பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.