/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
/
அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ADDED : ஏப் 23, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை அபெக்ஸ் சங்க, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உடுமலை அபெக்ஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
சென்னை அபெக்ஸ் சங்க மாநில நிர்வாகிகள் ராஜன் பிரசாத், பழனிசாமி, ஜெயபால், முன்னாள் தலைவர் கோவிந்தராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக, தலைவர் சந்திரன், துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் சீதாராமன், பொருளாளர் மவுன குருசாமி, இணைச்செயலாளராக உத்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

