/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்து வழக்கில் தண்டனை எதிர்த்த 'அப்பீல்' மனு தள்ளுபடி
/
விபத்து வழக்கில் தண்டனை எதிர்த்த 'அப்பீல்' மனு தள்ளுபடி
விபத்து வழக்கில் தண்டனை எதிர்த்த 'அப்பீல்' மனு தள்ளுபடி
விபத்து வழக்கில் தண்டனை எதிர்த்த 'அப்பீல்' மனு தள்ளுபடி
ADDED : ஜூன் 24, 2025 11:42 PM
திருப்பூர்; விபத்து வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரிய அப்பீல் மனுவை, திருப்பூர் கூடுதல் மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பூரை சேர்ந்தவர் தர்மர், 49. சரக்கு ஆட்டோ டிரைவர். கடந்த, 2018ம் ஆண்டு, நவ.,28ம் தேதி, தர்மர் ஓட்டிச் சென்ற சரக்கு ஆட்டோ, பி.என்., ரோடு பகுதியில் ஒரு கார் மீதும், பஸ்சுக்கு நின்றிருந்த இருவர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மரைக் கைது செய்தனர்.
அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனம் இயக்கியது, விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்புக்கு காரணமானது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில், கடந்த, 2022ம் ஆண்டில், திருப்பூர் ஜே.எம். எண்: 1 கோர்ட்டில், ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் தர்மர் அப்பீல் செய்தார். இதில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, தர்மருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் அவர், பிணையில்லா வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.