/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடையாள அட்டைக்கு விண்ணப்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம்
/
அடையாள அட்டைக்கு விண்ணப்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம்
அடையாள அட்டைக்கு விண்ணப்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம்
அடையாள அட்டைக்கு விண்ணப்பம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம்
ADDED : அக் 24, 2025 06:18 AM

திருப்பூர்: ஆவணங்களை முழுமையாக இணைக்காததால், யு.டி.ஐ.டி., அட்டை பெறமுடியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர் உதவி செய்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவில் பயன்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த அடையாள அட்டையே( யு.டி.ஐ.டி.,) போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், மருத்துவ பரிசோதனை முடிந்ததும், நேரடியாக யு.டி.ஐ.டி., கார்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துவருகின்றனர். மாவட்ட அளவிலான அடையாள அட்டையை பயன்படுத்தி யு.டி.ஐ.டி., கார்டுக்காக விண்ணப்பித்தும், கார்டு கிடைக்காத மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி சரி செய்துவருகின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று, மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு, யு.டி.ஐ.டி., பழைய பதிவுகளில் உள்ள பிழைகள் சரி செய்து, மீண்டும் விண்ணப்பம் பதிவு செய்துகொடுக்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கூறியதாவது:
புதிதாக பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகள், டாக்டர்கள் வழங்கும் மருத்துவ பரிசோதனை சான்று, ஆதார், புகைப்படம், கையொப்பம் ஆகிய ஆவணங்களோடு, யு.டி.ஐ.டி., போர்ட்டலில் விண்ணப்பித்து, அடையாள அட்டை பெறலாம். ஏற்கனவே யு.டி.ஐ.டி., அட்டைக்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் சிலரால், அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. இதற்கு, மாவட்ட அளவிலான அடையாள அட்டை நகலை முழுமையாக இணைக்காதது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
அத்தகைய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட அளவிலான அடையாள அட்டையின் முழு பக்கங்களின் நகல்களை இணைத்தும், வேறு பிழைகளை சரி செய்து, மீண்டும் விண்ணப்பித்து, அடையாள அட்டை பெறலாம். இதற்கு தேவையான உதவிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மேற்கொண்டுவருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

