தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில் அறங்காவலராக விண்ணப்பம்

கோவில் அறங்காவலராக விண்ணப்பம்

கோவில் அறங்காவலராக விண்ணப்பம்


UPDATED : ஆக 10, 2026 10:17 PM

ADDED : ஆக 10, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 10:17 PM ADDED : ஆக 10, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு புதிய அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விண்ணப்பிக்கும் அவகாசம் (12ம் தேதி) நிறைவடைகிறது.

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 217 கோவில்களுக்கும், தொடர்ந்து 77 கோவில்களுக்கும் அறங்காவலர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைய இருந்த விண்ணப்ப அவகாசம், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ஆக.12 வரை நீட்டிக்கப்பட்டது.

திருப்பூர் மண்டலத்தில், முதல்கட்டமாக 14 கோவில்களுக்கும், இரண்டாம் கட்டமாக 3 கோவில்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''விண்ணப்பங்கள் பெறும் பணி ஆக.12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக பரிசீலிக்கப்படும். கோவில் நிர்வாகத்தில் ஈடுபாடு, திருப்பணி, கும்பாபிஷேகம் உள்ளிட்ட சேவைகள், நிர்வாகத் திறன் போன்ற அம்சங்கள் அடிப்படையில் அறங்காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நியமன நடைமுறை இணை ஆணையர் மூலம் மேற்கொள்ளப்படும். பெரும்பாலான கோவில்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. சில முக்கிய கோவில்களுக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும், ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களும் விண்ணப்பித்துள்ளதால் போட்டி நிலவுகிறது,'' என்றனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us