/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ம.தி.மு.க., இளைஞரணி துணைச்செயலாளர் நியமனம்
/
ம.தி.மு.க., இளைஞரணி துணைச்செயலாளர் நியமனம்
ADDED : ஆக 10, 2025 08:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ம.தி.மு.க., மாநில இளைஞர் அணி துணை செயலாளராக திருப்பூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ம.தி.மு.க., திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்செல்வன். திருப்பூர் அருள்புரத்தைச் சேர்ந்தவர். இவரை, கட்சி யின் மாநில இளைஞர் அணியின் துணை செயலாளராக நியமித்து, கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவருக்கு கட்சியின் மாநில நிர்வாகிகளும், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.