sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

180 கோவிலுக்கு அறங்காவலர் நியமனம்; மாவட்ட அறங்காவலர் குழு அறிவிப்பு

/

180 கோவிலுக்கு அறங்காவலர் நியமனம்; மாவட்ட அறங்காவலர் குழு அறிவிப்பு

180 கோவிலுக்கு அறங்காவலர் நியமனம்; மாவட்ட அறங்காவலர் குழு அறிவிப்பு

180 கோவிலுக்கு அறங்காவலர் நியமனம்; மாவட்ட அறங்காவலர் குழு அறிவிப்பு


ADDED : ஜன 21, 2026 07:31 AM

Google News

ADDED : ஜன 21, 2026 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 180 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க, மாவட்ட அறங்காவலர் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு வாயிலாக, அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படுகிறது. சிறிய கோவில்களுக்கு, ஒரு நபர் அறங்காவலர் நியமனம் நடக்கிறது.

வருவாய் உள்ள கோவில்களுக்கு, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். வருவாய் அதிகமுள்ள முதல் நிலை கோவில்களுக்கு, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இக்கோவில்களுக்கு, துறை வாயிலாக நியமனம் நடக்கிறது. ஒருநபர் அறங்காவலர் மற்றும் மூன்று நபர் அறங்காவலர்கள் நியமனம், மாவட்ட அறங்காவலர் குழு வாயிலாக நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்துக்கான அறங்காவலர் குழு, 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளது. அதன்பின், அறங்காவலர் நியமனம் நடக்காத கோவில், அறங்காவலர் பதவி முடிந்த கோவில்களுக்கான நியமன பணி துவங்கியது.

அவ்வகையில், கடந்த நவ. 10ம் தேதி, மாவட்டத்தில் உள்ள, 90 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஜன. 7ம் தேதி, இரண்டாவதாக, 90 கோவில்களுக்கான அறங்காவலர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட கோவில் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில், அதுதொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது. இருப்பினும், 50 சதவீதம் அளவுக்கு கூட, அறங்காவலர் பதவி கேட்டு விண்ணப்பிக்கவில்லை.

போலீசில் தடையின்மை சான்று பெறுவது, சொத்துரிமை சான்று பெறுவது போன்ற இடர்பாடுகள் காரணமாக, அதிக ஆர்வம் காட்டுவதில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெரிய கோவில்களில் அறங்காவலராக அதிக போட்டி ஏற்படுகிறது. வருவாய் இல்லாத சிறிய கோவில்களில், சேவை மனப்பான்மையுடன் பணிகளை செய்ய, யாரும் முன்வருவதில்லை.

இதுகுறித்து மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஆடிட்டர் முத்துராமன் கூறுகையில், ''மாவட்ட குழு பொறுப்பேற்ற பின், 180 கோவில்களுக்கு, அறங்காவலர் குழு நியமன பணி துவங்கியது. மொத்த இடங்களில், 50 சதவீதம் இடங்களுக்கு விண்ணப்பம் செய்வதே இல்லை. நேரில் விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை. உரிய முறையில் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை. அந்தந்த ஊர்களை சேர்ந்த ஆன்மிக ஆர்வமுள்ளவர்கள், பக்தர்கள், அறங்காவலராக பொறுப்பேற்று, கோவில் பணிகளை செய்யலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us