தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


UPDATED : அக் 30, 2026 05:12 PM

ADDED : அக் 30, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:12 PM ADDED : அக் 30, 2026 05:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ேஹண்ட்பால் போட்டியில், சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை வகையில், 2026–27ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான ேஹண்ட்பால் போட்டி பொங்கலுாரில் நடந்தது.

போட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள், ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும், சூப்பர் சீனியர் மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.

இதற்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவர்களையும் மற்றும் பயிற்சி கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன், வழிகாட்டிய முதுகலை ஆசிரியர் திருமலைசாமிக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகீர் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us