/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் தின போட்டி :மாணவர்களுக்கு பாராட்டு
/
அறிவியல் தின போட்டி :மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 02, 2024 11:04 PM

உடுமலை;தேசிய அறிவியல் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, உடுமலை வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் நடந்தது.
இதில், அறிவியல் கண்காட்சி, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. வினாடி---வினா போட்டி, ஓவியம், பேச்சுப்போட்டியிலும் கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும், அறிவியல் கண்காட்சியிலும் சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

