/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவர்னரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு
/
கவர்னரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : பிப் 01, 2024 12:05 AM

திருப்பூர் : மாநில தேர்தல் விழிப்புணர்வு சுவர் இதழ் உருவாக்குவதல் போட்டியில், மூன்றாமிடம் பெற்ற மாணவருக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில், தேர்தல் விழிப்புணர்வுக்கான சுவர் இதழ் உருவாக்குதல் போட்டி நடந்தது. இதில், திருப்பூர், அங்கேரிபாளையம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பிரதீப்சஞ்சய் பங்கேற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று அசத்தினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ரவி, மாணவருக்கு, 3,000 ரூபாய் பரிசுத்தொகை, கேடயம், சான்றிதழ் வழங்கினார். மாநில போட்டியில் பங்கேற்று, பரிசு பெற்ற மாணவரை, கொங்கு மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பெஸ்ட் ராமசாமி, துணை தலைவர்கள் கீதாலயா முருகசாமி, டிக்சன் குப்புசாமி, பள்ளி செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே டெக்ஸ் கந்தசாமி, இணை செயலாளர் துரைசாமி, பள்ளியின் முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.