/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் பழகுனர் சேர்க்கை; நாளை முகாம்
/
தொழில் பழகுனர் சேர்க்கை; நாளை முகாம்
ADDED : ஏப் 14, 2025 05:53 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட அளவில் தொழில் பழகுனர்களுக்கான 'அப்ரன்டிஸ்' சேர்க்கை முகாம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது.
காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் உள்ள தொழில் பழகுனர் காலியிடங்களை நிரப்ப உள்ளன.
தேர்வு செய்யப்படுவோருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெறுவோருக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப, தொழில் பழகுனர்களுக்கான உதவித் தொகையும் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி., - எஸ்.சி.பி.டி., திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விரும்பும் 8, 10, பிளஸ்1, பிளஸ் 2 முடித்த தகுதியானவர்கள், உரிய ஆவணங்களுடன் பங்கேற்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் செயல்படும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகலாம்.
திருப்பூர், தாராபுரம், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை, 94990 55695, 98947 83226, 94990 55700 ஆகிய எண்களில் அழைக்கலாம்.