/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அஞ்சலக சேவையை மேம்படுத்தும் 'ஏ.பி.டி., 2.0' ; திருப்பூர் அலுவலகத்தில் அமலுக்கு வருகிறது

ADDED : ஜூலை 29, 2025 11:37 PM
திருப்பூர்; அஞ்சல் துறை சேவையை வேகமாக, துல் லியமாக மேற்கொள்ளும் வகையில் 'ஏ.பி.டி., 2.0' தொழில்நுட்பம், திருப்பூர் தபால் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னேற்றப்படி தான், 'ஏ.பி.டி., 2.0' தொழில்நுட்பம். கோட்ட தலைமை தபால் நிலையங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள துணை, கிளை அஞ்சலகங்களில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, அஞ்சலக சேவையை துல்லியமாக, எளிதாக, விரைவாக வழங்க முடியும்: அஞ்சல் துறையில் இத்தொழில்நுட்பம் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
இத்தொழில்நுட்பம் திருப்பூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.வரும், 2ல் பரிவர்த்தனை இல்லை!
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது:
திருப்பூர் அஞ்சல் கோட்ட தபால் நிலையங்களில், ஏ.பி.டி., 2.0 தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் நோக்கில், வரும், 2ம் தேதி, பரிவர்த்தனை இல்லாத நாள் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில், அஞ்சல் அலுவலகங்களில் எந்தவொரு பொது பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது.
எனவே, அஞ்சலக சேவை சார்ந்த பணிகளை, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இந்த குறுகிய இடையூறுக்கு, வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி, பொறுமை காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.