தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறனாய்வு தேர்வு 3,458 மாணவர் பதிவு

 திறனாய்வு தேர்வு 3,458 மாணவர் பதிவு

 திறனாய்வு தேர்வு 3,458 மாணவர் பதிவு


ADDED : ஜன 06, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வு, ஜன. 31ம் தேதி நடக்கவுள்ளது.

இந்தத் தேர்வின் வாயிலாக தலா, 500 மாணவ, மாணவியர் என ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு, 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இத்தேர்வுக்கு டிச. 17ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், இதுவரை, 3,458 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்களிடம் வழங்க, ஜன. 3 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை என்பதால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக, இன்று (6ம் தேதி) மாலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us