ADDED : பிப் 02, 2024 12:53 AM

அ நிறம் | அளவு
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பல ஆண்டுகளாக நுழைவாயில் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது, கோவில் புனரமைப்பு பணி நடந்து முடிந்து, கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. கோவில் பணிகளை மேற்கொண்ட போது, பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த, கோவில் நுழைவாயில் தற்போது புதிதாக கட்டப்பட்டது.நேற்று மாலை, புதிய நுழைவாயில் திறக்கப்பட்டது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் பங்கேற்று திறந்து வைத்தார். அவிநாசி தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், வக்கீல் பத்மநாபன், செல்வரங்கன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
