/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதிகள் இருக்கா? பள்ளிகளில் நடக்குது ஆய்வு
/
அடிப்படை வசதிகள் இருக்கா? பள்ளிகளில் நடக்குது ஆய்வு
அடிப்படை வசதிகள் இருக்கா? பள்ளிகளில் நடக்குது ஆய்வு
அடிப்படை வசதிகள் இருக்கா? பள்ளிகளில் நடக்குது ஆய்வு
ADDED : மார் 19, 2024 10:51 PM
உடுமலை;உடுமலையில், ஓட்டுச்சாவடி மையங்களாக இருக்கும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில், ஓட்டுச்சாவடி மையங்களாக இருக்கும் பள்ளிகளில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே, பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
லோக்சபா தேர்தல் தேதி ஏப்., 19 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓட்டுச்சாவடி மையங்களை பராமரிக்கும் பணிகளையும், மீண்டும் உடுமலை ஒன்றியத்தில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மண்டல துணை பி.டி.ஓ., க்கள், பொறியாளர்கள் அந்தந்த மண்டலங்களுக்குட்பட்ட பள்ளிகளில், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை ஆய்வு நடத்துகின்றனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலையொட்டி மட்டுமின்றி, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் பள்ளிகளில், கட்டமைப்பு மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஓட்டுச்சாவடிகளுக்கான கட்டமைப்பில் எந்த சிக்கலும் இருக்காது. அடிப்படை தேவைகள் இருப்பதை, அந்தந்த பகுதி அலுவலர்கள் உறுதிசெய்து வருகின்றனர்' என்றனர்.

