/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ்கள் போட்டா போட்டி டிரைவர்கள் வாக்குவாதம்
/
பஸ்கள் போட்டா போட்டி டிரைவர்கள் வாக்குவாதம்
ADDED : பிப் 25, 2024 12:06 AM

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்டில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இடையே அடிக்கடி போட்டாபோட்டி ஏற்பட்டு வருகிறது. இதனால், போட்டி போட்டுக் கொண்டு பஸ்களை இயக்குவதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு, நேற்று காலை போட்டி போட்டுக் கொண்டு வந்த அரசு, தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னதாக, கோவை -- திருப்பூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போட்டி போட்டபடி பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து நின்றன. பஸ் செல்ல வழியில்லை என்பதால், பஸ்களின் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் சிலர் சமாதானம் செய்ய முற்பட்டனர். இதற்கிடையே, பஸ் ஸ்டாண்டுக்கு வந்த எஸ்.ஐ., 'உங்களுக்குள் பிரச்னை என்றால் போலீசில் புகார் கொடுங்கள். இதனை விடுத்து, பஸ் ஸ்டாண்டுக்குள் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம்,' என்றார்.
இதனால், இரண்டு பஸ்களும் அங்கிருந்து கிளம்பின. இதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே, பஸ்கள் போட்டி போட்டு இயக்கப்படுவதுடன், தாறுமாறாகவும் நிறுத்தப்படுகின்றன. இது தொடர்பாக போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.