/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோள விவசாயிகளுக்கு விற்பனை கூடத்தில் ஏற்பாடு
/
மக்காச்சோள விவசாயிகளுக்கு விற்பனை கூடத்தில் ஏற்பாடு
மக்காச்சோள விவசாயிகளுக்கு விற்பனை கூடத்தில் ஏற்பாடு
மக்காச்சோள விவசாயிகளுக்கு விற்பனை கூடத்தில் ஏற்பாடு
ADDED : ஜன 11, 2025 09:38 AM
உடுமலை : மக்காச்சோளத்தை காய வைக்கும் விவசாயிகளின் தேவைக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்காக பிரதானமாக சாகுபடி செய்யப்பட்ட, மக்காச்சோள சாகுபடியில், அறுவடை தீவிரமாக நடக்கிறது.
பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர்களத்தில் மக்காச்சோளத்தை காய வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ், விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, விவசாயிகள் நலனுக்காக, இரவு 11:00 மணி வரை ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்படும். மேலும், மக்காச்சோளத்தை காய வைக்கும் உலர்களங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி இ - நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் ரூ. 4.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 207 குவிண்டால், மக்காச்சோளம் மற்றும் ரூ. 22.77 லட்ச ரூபாய் மதிப்பிலான 230 குவிண்டால் கொப்பரை விற்பனை செய்யப்பட்டது.
மக்காச்சோளத்தை இருப்பு வைத்து விற்பனை செய்யவும், விற்பனை கூட வளாகத்தில், தேவையான குடோன்கள் உள்ளது. தேவையான விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என, விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமன் தெரிவித்தார்.