/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி
/
செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : நவ 09, 2025 12:05 AM

திருப்பூர்: பழனிசாமி - பொன்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில், மாற்றுத் திறனாளிகள் மூவருக்கு, செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சி, வீரபாண்டியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் கோவிந்தராஜ், தலைமை வகித்தார். 'சக்ஷம்' அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கினார். நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு ரோட்டரி உறுப்பினர் கோபால், பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் போது, புதிதாக செயற்கை கால் கேட்டு விண்ணப்பித்த வட மாநிலத்தை சேர்ந்த துாய்மைப்பணியாளர் ஒருவர் உட்பட, நான்கு பேருக்கு அளவீடு செய்யப்பட்டது. 'அவர்களுக்கு இரு வாரத்தில் செயற்கை அவயம் வழங்கப்படும்' என, அறக்கட்டளை தலைவர் தெரிவித்தார்.

