தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்


ADDED : ஆக 16, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 17–

திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில் பயனாளிகளுக்குச் செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஆசிரம வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரத்தினசாமி, ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஆசிரமப் புரவலர் ராஜ்தானி குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் அளவீடு செய்துகொண்ட 13 பயனாளிகளுக்கு, 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை அவயங்களை தொழிலதிபர்கள் தங்கமணி, பிரேம்பிரகாஷ் சிக்கா ஆகியோர் வழங்கினர். ஆசிரம நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

பழனிசாமி –- பொன்னம்மாள் அறக்கட்டளைத் தலைவர் கோவிந்தராஜ், அக்சய பாத்திரம் அறக்கட்டளைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். முகாமில் புதிதாக 22 மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை அவயம் வழங்க அளவீடு செய்யப்பட்டது. இவர்களுக்கான அவயங்கள் அடுத்த மாத முகாமில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

–––

செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டோருடன் சக்‌ஷம் உள்ளிட்ட அமைப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us