/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் மனக்குமுறல் மனுவாக... தீர்வு கிடைக்கணும் விரைவாக!
/
மக்கள் மனக்குமுறல் மனுவாக... தீர்வு கிடைக்கணும் விரைவாக!
மக்கள் மனக்குமுறல் மனுவாக... தீர்வு கிடைக்கணும் விரைவாக!
மக்கள் மனக்குமுறல் மனுவாக... தீர்வு கிடைக்கணும் விரைவாக!
ADDED : செப் 23, 2024 11:36 PM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி பொதுமக்கள், தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி, குறைகேட்பு கூட்டத்தில் வழங்கினர். கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மகளிர் திட்ட இயக்குனர் சாம்சாந்தகுமார், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
குடிநீர் இணைப்பு கொடுங்க...
வெள்ளியம்பாளையம் மேற்கு தோட்டத்தில், ஏராளமானோர் குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகள் கோட்ட மங்கலம் ஊராட்சியில், வடுகபாளையம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ளது. தொலை துாரத்திலுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். தோட்டத்து வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும்.
- பொதுமக்கள்
வெள்ளியம்பாளையம்
கோட்டமங்கலம்.
-----------------------
கல்குவாரியால் பிரச்னைங்க...
ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம், செம்பாவள்ளம் கிராமத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம். அருகாமையில் உள்ள கல்குவாரியில் பாறைக்கு வெடி வைப்பதால் ஏற்படும் மாசு, விவசாய நிலங்கள், வீடுகளில் பரவி மாசு ஏற்படுத்துகிறது. சிதறும் கற்கள், கால்நடைகள் மீது விழுந்து காயம் ஏற்படுத்துகின்றன. வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. குடியிருப்பு, விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குவாரி மற்றும் கிரசர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- கோவிந்தசாமி
மற்றும் பொதுமக்கள்
மொரட்டுப்பாளையம்
-----------------------
பட்டா கொடுங்க...
பல்லடம் தாலுகா, வே.கள்ளிபாளையம் கிராமத்தில், 30 பேர் எஸ்.எப்., 525/2 காலையில் வசித்து வருகிறோம். பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- துத்தாரிபாளையம் மக்கள்

