பா.ஜ., வேட்பாளர் தேர்வு நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
பா.ஜ., வேட்பாளர் தேர்வு நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ADDED : மார் 05, 2024 11:51 PM
திருப்பூர்;திருப்பூர் தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய, பா.ஜ., நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கபட உள்ள நிலையில், பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், பா.ஜ., நிர்வாகிகளிடம் தாங்கள் விரும்பும் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. மூன்று தகுதியான நபர்களை கூறலாம் என்று, அவர்களிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ., நிர்வாகிகள் தங்களுக்கு விருப்பமுள்ள நபர்களின் பெயரை அதில் எழுதி கொடுத்தனர்.
அவ்வகையில், மாநில துணை தலைவர் கனகசபாபதி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கணியாம்பூண்டி செந்தில், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி ஆகியோர் திருப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளராக போட்டியில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
