ADDED : மார் 09, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. ஓ.பி.சி. அணி சார்பில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தலைவர்கள் சந்திப்பு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொது செயலாளர் வினோத் வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அய்யப்பன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மண்டல அளவிலான அமைப்புகளை முழுமைப்படுத்துதல், சமுதாய தலைவர்களை கண்டறிந்து, அவர்களை தொடர்பு கொள்வது.
வரும் சட்டசபை தேர்தலில் கிளை மற்றும் சட்டசபை அளவில் வாக்காளர்களை அடையாளப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
