/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
/
சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
ADDED : பிப் 13, 2025 12:28 AM

திருப்பூர்; தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தியது.
அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையிலான குழுவினர், காலை முதல் மாலை வரை, குமார் நகரிலுள்ள துணை மின்நிலையம், முதலிபாளையம் தாட்கோ பின்னலாடை தொழிற்பேட்டை, கரைப்புதுாரில் சாய ஆலை நிறுவனம், பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் ரேஷன் கடை, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, அவிநாசி பேரூராட்சியில் தாட்கோ வணிக வளாகம் ஆகிவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் மாலை, 4:00 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் உப்பட குழு உறுப்பினர்கள் ஒன்பதுபேர், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில், மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, தையல் மெஷின், கிறிஸ்தவ உபதேசிகர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய அட்டை என, 29 பயனாளிகளுக்கு, மொத்தம், 51.02 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.