/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பீடு என்பது உங்களை அறிந்து கொள்ளத்தான்...
/
மதிப்பீடு என்பது உங்களை அறிந்து கொள்ளத்தான்...
ADDED : பிப் 23, 2024 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து அதனை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை கூறக்கூடியவர், உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் அவர்களிடமிருந்து உங்கள் முன்னேற்றத்திற்கான சமரசமில்லாத தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். அதனால், அவர்கள் கூறும் கருத்துக்கு நீங்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை, அதே போன்று அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.