ADDED : மார் 18, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க உடுமலை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் வரவேற்றார். சங்க பொறுப்பாளர்கள் வரவு செலவு கணக்குள், ஆண்டு அறிக்கை வாசித்தனர். சங்கத்தின் ஆண்டு விழா நடத்துவது, மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் செலவுத்தொகை முழுவதும் வழங்க வலியுறுத்தல், புதிதாக பழநி மாவட்டம் உருவாக்கப்பட்டால், அதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை சேர்க்கக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் சிவராஜ் நன்றி தெரிவித்தார்.