/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பழனிசாமிக்கு பாராட்டு விழா! திசை மாறிய ஓட்டுகள் திரும்புமா?
/
அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பழனிசாமிக்கு பாராட்டு விழா! திசை மாறிய ஓட்டுகள் திரும்புமா?
அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பழனிசாமிக்கு பாராட்டு விழா! திசை மாறிய ஓட்டுகள் திரும்புமா?
அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பழனிசாமிக்கு பாராட்டு விழா! திசை மாறிய ஓட்டுகள் திரும்புமா?
ADDED : ஜன 30, 2025 07:28 AM

திருப்பூர்; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், ஜெ., முதல்வராக இருந்த போது, திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின், முதல்வர் பொறுப்பேற்ற பழனிசாமி, நிதி ஒதுக்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். அவரது ஆட்சியில், 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றன. தற்போது திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அத்திக்கடவு திட்டத்தை முன்னெடுத்த வகையில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு அன்னுார், கஞ்சப்பள்ளியில், வரும், 9ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஏற்கனவே, அ.தி.மு.க.,வின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில், அத்திக்கடவு திட்டம் கட்சியை வலுப்படுத்தும்; நிரந்தர ஓட்டு வங்கியை ஏற்படுத்திக் கொடுக்கும்' என தலைமை 'கணக்கு' போட்டது. அதனடிப்படையில் தான், முதல்வராக பழனிசாமி பதவி வகித்த போது, இத்திட்டத்திற்கென, 1,652 கோடி ரூபாயை முழுக்க மாநில அரசு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தார்.
கடந்த லோக்சபா தேர்த லில், எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. இந்த மூன்று மாவட்டங்களிலும், அ.தி.மு.க., ஓட்டு வெகுவாக குறைந்தது. திட்டத்தின் கீழ் நேரடி பயன்பெறும் மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலுார், கவுண்டம்பாளையம், பெருந்துறை, கோபி, திருப்பூர் வடக்கு தொகுதிகளில் கூட, அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிந்தது.
கடந்த, 2021 சட்டபை தேர்தலில், இந்த ஏழு தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்களே வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இருப்பினும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், இந்த தொகுதி களில் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டு கணிசமாக குறைந்து, பா.ஜ.,வுக்கான ஓட்டு அதிகரித்திருக்கிறது. ஏழு தொகுதிகளிலும், மொத்தம் பதிவான ஓட்டுகள் அடிப்படையில், தி.மு.க., - 42.14, அ.தி.மு.க., -25.47, பா.ஜ., - 24.04 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. 2019 தேர்தலில், தி.மு.க., - 45.74, அ.தி.மு.க., - 36 சதவீத ஓட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அத்திக்கடவு திட்டம் தொடர்புடைய சட்டசபை தொகுதிகளில் கூட, அ.தி.மு.க., ஓட்டுகளை, பா.ஜ., அறுவடை செய்திருக்கிறது. எனவே, விவசாயிகளின் ஓட்டுகளை மொத்தமாக அள்ள அ.தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. அதற்கு, இந்த பாராட்டு விழா, துவக்கப்புள்ளியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

