/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; கைகொடுக்குமா பருவ மழை?
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; கைகொடுக்குமா பருவ மழை?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; கைகொடுக்குமா பருவ மழை?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; கைகொடுக்குமா பருவ மழை?
ADDED : ஜூன் 26, 2025 11:46 PM

திருப்பூர்; நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சார்ந்த விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திலும், அதன் தாக்கம் தென்படுகிறது; அவ்வப்போது, மழை கொட்டி தீர்க்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து, பவானி சாகர் அணையை நிரப்புகிறது.
காலிங்கராயன் அணைக்கட்டை எட்டி, அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் தான், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு ஆதாரம் என்ற நிலையில், நீலகிரியில் எந்தளவு பலத்த மழை பெய்கிறதோ, இத்திட்டம் விவசாயிகளுக்கு சாதகம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
கடந்த இரு வாரமாக நீலகிரியில் பரவலாக பெய்து வரும் மழை, அத்திக்கடவு திட்டம் சார்ந்த திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த மழைநீர் செறிவூட்டப்படுவதன் வாயிலாக, விவசாயம் செழிக்கும் எனவும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மாயாறு திட்டம் நிறைவேறினால் கூடுதலாக 7 டி.எம்.சி., கிடைக்கும்
நீலகிரியில் பெய்து வரும் மழையால், பவானிசாகர் அணை, 90 அடி கொள்ளளவு எட்டியுள்ளது. உபரிநீர் வெளியேறும் போது, அத்திக்கடவு குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் வாய்ப்புண்டு. அதே நேரம், பாண்டியாறு - மாயாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால், கூடுதலாக, 7 டி.எம்.சி., நீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அத்திக்கடவு திட்டத்துக்கு தேவையான, 3 டி.எம்.சி., நீர் போக எஞ்சிய நீரை, கோபி, ஈரோடு பகுதி மக்களின் விவசாய தேவைக்கும் பூர்த்தி செய்ய முடியும்.
- பரமேஸ்வரன், நிறுவனர், உழவர் சிந்தனை பேரமைப்பு.