/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை
அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை
அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடு பவானி பாசன விவசாயிகள் புதிய கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 09:19 PM
திருப்பூர்:'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் விதிமுறைகளை வரையறை செய்ய வேண்டும்; பெயர் மாற்ற வேண்டும்' என, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் நிறைவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.
பவானி ஆற்று நீரை மையமாக வைத்து, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீரை, நீரேற்று நிலையங்கள் வாயிலாக 'பம்ப்' செயது, மூன்று மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 1,045 குளம், குட்டைகளுக்கு நிரப்புவதே திட்டம்.
இந்நிலையில், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பவானிசாகர் அணையில் இருந்து, 95 கி.மீ., கடந்து வரும் பவானி நதி, அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று நிலையம் வந்தடைகிறது.
இந்த நதிக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள அடர் வனப்பகுதியில் உள்ள பெரிய குளம், தண்ணீர் பந்தல் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி போன்றவற்றின் உபரிநீர் மற்றும் வனத்தில் உள்ள ஓடைகளின் வழியே வரும் நீர் ஆகியவை தான், அக்., - நவ., மாதங்களில் பாசன தேவை போக, காலிங்கராயன் அணையை தாண்டி, உபரியாக வெளியேறுகிறது; இந்த உபரி நீரை மட்டுமே, அத்திக் கடவு திட்டத்திற்கு எடுக்க முடியும்.
இவ்வழித்தடத்தில் வரும் உபரி நீரை, பவானி நதி, காவிரியோடு கலக்கின்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து, இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குளங்களுக்கு, 1.5 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, 'காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி - அத்திக்கடவு உபரி நீரேற்று திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.