/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிருது சாமளாபுரம் பாலம்: மக்கள் அச்சம்
/
அதிருது சாமளாபுரம் பாலம்: மக்கள் அச்சம்
ADDED : அக் 14, 2024 11:51 PM

பல்லடம் : பல்லடம் அருகே சாமளாபுரம்- - சோமனுார் செல்லும் வழித்தடத்தில், நொய்யல் ஆற்றுக்கு இடையே, உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது, பாலம் அதிர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கோவை மாவட்டத்துடன் திருப்பூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் மீது, சாமளாபுரம் உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது. பொள்ளாச்சி -- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன.
பல ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் வலுவிழந்துள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, பாலம் மிகவும் அதிர்வடைகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
பாலம் குறுகலாகவும் இருப்பதால், வாகனங்கள் செல்வதிலும் இடையூறு ஏற்படுகிறது. பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்வதுடன், புதிய உயர்மட்ட பாலம் கட்டுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.