/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் நடந்த அட்டூழியம்; பல்லடம் போலீஸ் விசாரணை
/
பள்ளியில் நடந்த அட்டூழியம்; பல்லடம் போலீஸ் விசாரணை
பள்ளியில் நடந்த அட்டூழியம்; பல்லடம் போலீஸ் விசாரணை
பள்ளியில் நடந்த அட்டூழியம்; பல்லடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 28, 2025 10:44 PM
பல்லடம்; கோடங்கிபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த சமூக விரோதிகள் சிலர், தலைமை ஆசிரியர் அறை கதவை உடைத்து, உள்ளே இருந்த சாவியை பயன்படுத்தி, கணினி அறையைத் திறந்து, அங்கு, மது அருந்தியும், புகை பிடித்து அட்டகாசம் செய்துள்ளனர்.
அதன்பின், வகுப்பறைக்கு வெளியே, பள்ளி வளாகத்துக்குள் மலம் கழித்து விட்டு, எடுத்து வந்த சாவியை மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்குள் வீசி சென்றனர்.
விடுமுறை தினத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, இப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கணினி அறைக்குள் சமூக விரோதிகள் இருந்தது, அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், அதன் வீடியோ காட்சிகளை எடுக்க வேண்டுமானால், சென்னை, பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆதாரங்கள் கிடைத்ததும், விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் கூறினர்.