/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தளி பேரூராட்சி துணைத்தலைவர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மலைவாழ் மக்கள்
/
தளி பேரூராட்சி துணைத்தலைவர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மலைவாழ் மக்கள்
தளி பேரூராட்சி துணைத்தலைவர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மலைவாழ் மக்கள்
தளி பேரூராட்சி துணைத்தலைவர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மலைவாழ் மக்கள்
ADDED : டிச 18, 2024 08:26 PM

உடுமலை; உடுமலை அருகே, தளி பேரூராட்சி துணைத்தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தளி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள தளி பேரூராட்சி, உடுமலை கால்வாய் அருகே உள்ள, மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமும் உள்ளதாக கூறி, இரு தரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உரிய அளவீடு செய்து பணி மேற்கொள்ள, அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம், பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த, துணைத்தலைவர் செல்வனிடம், தளியை சேர்ந்த, சின்னு (எ) கருணாகரன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சேரை எடுத்து தாக்க முயற்சித்தார். அங்கிருந்தவர்கள், விலக்கி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வன் தளி போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில்,' குறுமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த, செல்வன், 37. பேரூராட்சி, 16வது வார்டு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் உள்ளேன்.
நேற்று மதியம், 12:50 மணிக்கு, செயல் அலுவலர் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, சின்னு ( எ) கருணாகரன் வந்து, மலைப்பகுதியிலிருந்து வந்து, தளியில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட, நீ யார் என தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கினார்,' என தெரிவித்துள்ளார்.
இதே போல், கருணாகரன் தரப்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.