/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : பிப் 05, 2025 12:29 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அருகேயுள்ள பெரிய பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மகன் அருண், 25, பனியன் தொழிலாளி.
இவர் கடந்த, 1ம் தேதி இரவு கிழக்கு நல்லாத்துபாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த சாமியப்பன், என்பவர் அருணிடம், 'இரவு ஏன் இங்கு வந்தாய்?' என கேட்க இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சாமியப்பன் அவரது மகன்கள் சேர்ந்து அருணை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அருண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதல் குறித்து, அருண் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தியதால், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று காலை அருணுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த, 50 பேர் வாயில் கருப்பு துணி கட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அதன்பின், கமிஷனர் அலுவலகம் சென்று மனு கொடுத்து, கலைந்து சென்றனர்.