/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ‘தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தேவை’
‘தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தேவை’
‘தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தேவை’
ADDED : செப் 20, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், செப்.21–
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; ஆசிரியர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்கியது போல் உடனடியாக பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்களின் பணியை உயர்வாக எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து, கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
