/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி இடத்தில் கட்டடம் கட்ட முயற்சி
/
ஊராட்சி இடத்தில் கட்டடம் கட்ட முயற்சி
ADDED : டிச 31, 2024 04:55 AM

அனுப்பர்பாளையம் : திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி, மூன்றாவது வார்டு குலாலர் வீதியில் ஊராட்சிக்கு சொந்தமான 1.5 சென்ட் காலி இடம் உள்ளது. அந்த காலி இடத்தை சிலர் ஆக்கிரமித்து சொந்த தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
நேற்று அப்பகுதிக்கு சென்ற ஊராட்சி தலைவர் சாந்தாமணி, துணை தலைவர் வேலுசாமி, ஆகியோர் அருகில் பஸ் ஸ்டாப் உள்ளதால் காலி இடத்தில் தாய்மார்கள் பாலுட்டும் அறை கட்டப்போவதாக கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி தாசில்தார் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி ஆகியோர் அங்கு சென்று, அனுமதியின்றி கட்டடம் கட்டக்கூடாது. இடத்தை அளவீடு செய்து, முறையாக அனுமதியோடு பணி செய்யுங்கள் என்றனர். இதனால் கட்டடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு, கொண்டு வந்த பொருட்கள் திருப்பி எடுத்து செல்லப்பட்டது.
ஊராட்சி தலைவர் சாந்தாமணி கூறுகையில், ''ஊராட்சி தலைவருக்கு அனுமதியின்றி அவசர தேவைக்கு செலவு செய்ய அதிகாரம் உண்டு. ஊராட்சி இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அதனை மீட்டு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் பாலுட்டும் அறை கட்ட முன் வந்தோம்.இல்லை என்றால், சுற்றி வேலி அமைக்க உள்ளோம்,'' என்றார்.