/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்த முயற்சி; அதிகாரிகள் போலீசில் புகார்
/
கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்த முயற்சி; அதிகாரிகள் போலீசில் புகார்
கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்த முயற்சி; அதிகாரிகள் போலீசில் புகார்
கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்த முயற்சி; அதிகாரிகள் போலீசில் புகார்
ADDED : ஜன 21, 2025 11:51 PM

உடுமலை; மடத்துக்குளம் அருகே, அமராவதி கால்வாய் கரையில் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயற்சி நடந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி அணையில் கீழ் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், காரத்தொழுவு, கணியூர், சோழமாதேவி, கடத்துார், கண்ணாடிபுத்துார் ஆகிய ராஜவாய்க்கால்கள் வழியாகவும், பிரதான கால்வாய் வாயிலாகவும், நீர் வழங்கப்படுகிறது.
கால்வாய்களின் கரைகளில், பல்வேறு வகை மரங்கள் உள்ளன. கரைகளை வலுப்படுத்தும் வகையிலும், பசுமையாகவும், பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
50 ஆண்டுக்கும் மேலாக வளர்ந்து காணப்படும் இம்மரங்களை, இரவு மற்றும் பகல் நேரங்களில் வெட்டி, கடத்தப்படும் சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, அமராவதி பழைய ஆயக்கட்டு, கணியூர் கால்வாய் கரையில், சோழமா தேவி பகுதியில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஏழு மரங்களை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். அவற்றை கடத்த முயற்சித்த போது, விவசாயிகள் பார்த்ததால், தப்பி ஓடினர்.
இது குறித்து, நீர் வளத்துறை, மடத்துக்குளம் உதவி பொறியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் பானுமதி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திர பூபதி, பாசன சபை தலைவர் பரமசிவம், உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
வெட்டப்பட்ட மரங்களை அதிகாரிகள் கைப்பற்றியதோடு, கணியூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அரசுக்கு சொந்தமான கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்த நடத்த சம்பவத்தால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.