/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதியர் சங்க கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
/
ஓய்வூதியர் சங்க கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : நவ 03, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், வட்டக்கிளை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டக்கிளை சங்கத்தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
ஓய்வூதியர்களின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகள், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலரும் பங்கேற்றனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.