/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூளவாடி பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
/
பூளவாடி பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
ADDED : அக் 16, 2025 08:42 PM
உடுமலை: பூளவாடி மின் பிரிவு அலுவலகத்திலுள்ள ஒரு சில கிராமங்களில் மின் கணக்கீடு செய்ய முடியாததால், கடந்த ஆக., மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
உடுமலை கோட்டம், பூளவாடி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ஆத்துக்கிணத்துப்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, அப்பிலியாபட்டி மற்றும் கள்ளப்பாளையம் பகிர்மானத்திலுள்ள மின் இணைப்புகளுக்கு, நடப்பு அக்., மாத மின் கணக்கீடு நிர்வாக காரணங்களினால் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, மேற்பட்டி பகுதியிலுள்ள மின் நுகர்வோர் ஆக., 2025 செலுத்திய மின் கட்டண தொகையையே, நடப்பு மாதத்திற்கான மின் கட்டண தொகையாக செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.